இனி வாட்ஸ்ஆப் மெசேஜ்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்.. ரியாக்ட் செ

இனி வாட்ஸ்ஆப் மெசேஜ்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்.. ரியாக்ட் செ

இந்த மெசேஜ் ரியாக்ட் அம்சத்தை டெஸ்க்டாப் வாட்ஸ்ஆப் வெப்பிற்கும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியாக இருக்கிறது.

இந்த செயலியில் வாய்ஸ் கால், வீடியோ கால், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப்பில் மெசேஜ்ஜுக்கு பதில் சொல்லாமல் ரியாக்ட் செய்யும் அம்சமும் இடம்பெற்றுள்ளது.

இதன்படி நமக்கு வந்திருக்கும் மெசேஜ்ஜை அழுத்தி பிடித்தால் ஃபேஸ்புக்கில் இருப்பது போலவே 6 எமோஜிக்கள் காட்டப்படும். இதில் நமக்கு எது தேவையோ அதை கிளிக் செய்து ரியாக்ட் செய்யலாம். தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கவுள்ளது.

இந்த மெசேஜ் ரியாக்ட் அம்சத்தை டெஸ்க்டாப் வாட்ஸ்ஆப் வெப்பிற்கும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது