'2023 பட்ஜட்'  - இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

'2023 பட்ஜட்'  - இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2023 நிதியாண்டுக்கான வரவு – செலவும் திட்டதின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு  சற்றுமுன்னர் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவு – 121
எதிர்ப்பு – 84
அளிக்கப்படாத வாக்கு - 1 

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் விமல் மற்றும் டளஸ் அணிகள் வரவு – செலவும் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன. 

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கின் தமிழ் கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.