500 கோடி பட்ஜெட் படத்தில் நடிகர் சூர்யா!

500 கோடி பட்ஜெட் படத்தில் நடிகர் சூர்யா!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சூர்யா, அவர் நடிப்பில் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்கள் உருவாக இருக்கிறது.

அந்த வகையில் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகும் அப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் Project K. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.

அப்படியான இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோண் உள்ளிட்டோர் நடத்து வருகின்றனர். மேலும் தற்போது நடிகர் சூர்யாவையும் அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, ஆனால் இப்படியொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.