அக்கரபத்தனை பிரதேச சபையின் வரவு - செலவு திட்டம் நிறைவேற்றம்! 

அக்கரபத்தனை பிரதேச சபையின் வரவு - செலவு திட்டம் நிறைவேற்றம்! 

அக்கரப்பத்தனை பிரதேச சபையின்  2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் சபையின் 15 உறுப்பினர்களின் ஆதரவோடும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் ராமன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சபையின் வருடார்ந்த வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வரவு செலவு திட்டத்தில் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் சுற்றாடல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பல வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டது.

மேலும் கல்வி,ஆயுர்வேத வைத்தியமுறை,நடமாடும் சேவைகள் போன்றவற்றையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலுமான வரவு செலவு திட்டமாக அமைந்ததோடு அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு வருமானம் பெறக்கூடிய சில யோசனைகளும் சபையில் முன்வைக்கப்பட்டது.

சபை உறுப்பினர்களின் நீண்ட உரையாடல்களின் பின்னர் வரவு செலவு திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

(தகவல் : நீலமேகம் பிரசாந்த்)