தமிழகத்தில் விபத்தில் சிக்கிய பொகவந்தலாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இலங்கையில் இருந்து சென்னை சென்ற பொகவந்தலாவை சேர்ந்த 14 பேர் அங்கிருந்து வேனொன்றில் புறப்பட்டுள்ளனர். சாரதியுடன் சேர்த்து மொத்தம் 15 பேர்

தமிழகத்தில் விபத்தில் சிக்கிய பொகவந்தலாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுக்குமாறு சென்னையில் உள்ள இலங்கை தூணை தூதுவரிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஐயப்ப பக்தர்களின் உறவினர்கள், விபத்து தொடர்பில் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேலின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். தமது உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து அமைச்சரை தொடர்புகொண்ட ரவி குழந்தைவேலு, நிலைமை குறித்து எடுத்துரைத்துள்ளார். அதன்பின்னர் சென்னையில் உள்ள தூதுவரை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்டுள்ள பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுக்குமாறு கோரியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இலங்கையில் இருந்து சென்னை சென்ற பொகவந்தலாவை சேர்ந்த 14 பேர் அங்கிருந்து வேனொன்றில் புறப்பட்டுள்ளனர். சாரதியுடன் சேர்த்து மொத்தம் 15 பேர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்ற போது வேன் திடீரென பிரேக் டவுன் ஆனது.

இதைடுத்து சாலையோரம் வேனை நிறுத்தி சாரதி பழுது பார்த்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த மற்றொரு வேன் டிரைவரும் வண்டியை நிறுத்திவிட்டு வந்து சென்னை வேன் சாரதிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து கம்பத்தை நோக்கி வந்த தனியார் பஸ் முன்னால் நின்ற சென்னை வேனில் பின்புறம் மோதியது. இதில் வேனில் இருந்த பொகவந்தலாவையை சேர்ந்த 14 பேரும் காயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக ஆம்புயூலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.