அமரர் சி.வி.வேலுப்பிள்ளையின் 38ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

அமரர் சி.வி.வேலுப்பிள்ளையின் 38ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களின் ஒருவரும் மலையக அரசியல் தொழிற்சங்க இலக்கிய ஆளுமைகளின் ஒருவருமான அமரர்.சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் 38 ஆவது நினைவு தினம் நாளை 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நினைவு தினத்தை முன்னிட்டு நாளை 19 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் வட்டகொடை மடக்கும்புர தோட்ட ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் அதனைத் தொடர்ந்து மடக்கும்புர தோட்டத்தில் அமைந்துள்ள அமரர் சி .வி வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு தூபிக்கு அருகில் நினைவஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கேற்ப
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.