சந்திரிகா - மைத்திரி இணைவு இழுபறியில்!
தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் திட்டத்தில் மைத்திரி இருப்பதாலேயே இந்த இழுபறி நீடிக்கின்றது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா அம்மையார், மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒன்றிணையும் செயற்பாடு தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது.
தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் திட்டத்தில் மைத்திரி இருப்பதாலேயே இந்த இழுபறி நீடிக்கின்றது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான மைத்திரியை வேட்பாளராக இறக்குவதில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிகாவிடம் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்று அறியமுடிகின்றது.
அதேவேளை, அமைச்சர்களாக இருக்கின்ற சு.க. உறுப்பினர்கள் எவரும் மைத்திரியைக் களமிறக்க விரும்பவில்லை
என்றும், சு.க ரணிலுக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.