​​நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான வேலைத்திட்டம்-ஜனாதிபதி!

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகிய அமைச்சுகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

​​நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான வேலைத்திட்டம்-ஜனாதிபதி!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


அதன்படி ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகிய அமைச்சுகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அத்துடன், சிங்கள தமிழ் புத்தாண்டின் போது, ​​நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.