இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத காலம் சிறை தண்டனை! 

இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத காலம் சிறை தண்டனை! 

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் லிங்குசாமி.

இவர்கள் இயக்கத்தில் சமீபத்தில் தான் தி வாரியர் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. நடிகர் ராம் நடித்திருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்நிலையில் பிவிபி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     

‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார்.

பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ. 1.03 கோடி கடனுக்காக வழங்கிய காசோலையில் பணமில்லாமல் போக தற்போது இயக்குநர் லிங்குசாமி மீது வழக்கு திரும்பியுள்ளது.