நாளை கறுப்பு கொடியை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவியுங்கள்!

நாளை கறுப்பு கொடியை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவியுங்கள்!

நாடளாவிய ரீதியில்  தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் உதவி செயலாளர் ஆ.முத்துலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 
தொழிற்சங்கங்களிடையை நாளைய போராட்டம் தொடர்பாக ஒருமித்த கருத்தை காணமுடியவில்லை. நாளைய போராட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொண்டால்  அவர்களின் ஊதியம் பாதிக்கப்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.

நாடு எதிர்நோக்கியுள்ள அவலத்தில் இருந்து மீள வேண்டுமெனின் நாமும் இப்போராட்டத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். 

எம் மக்களின் வாழ்விடங்களை புவியியல் சார் அமைவிடத்துடன் நோக்கும் போது அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. எனவே இயலுமானவர் போராட்டத்தில் தமது பங்களிப்பை நேரடியாக வழங்க வேண்டும். ஏனைய தொழிலாளர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு கொடிகளை கட்டாயமாக பறக்க விட்டு தொழிலுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

(செய்தி - பசறை நிருபர்)