வசூலில் கலக்கும் கார்த்தியின் விருமன்!

வசூலில் கலக்கும் கார்த்தியின் விருமன்!

கார்த்தியின் விருமன் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் விருமன்.

தன்னுடைய தாயின் இறப்புக்கு காரணமானவரை பழிவாங்க நினைக்கும் மனிதனின் வாழ்க்கை குறித்த ஒரு கதையாக படம் அமைந்துள்ளது. கிராமத்து பின்னணி தயாராகிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை.

கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியான இப்படம் 17 நாள் முடிவில் ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போதும் தமிழகத்தில் பல இடங்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.