எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் - ஜப்னா கிங்ஸை வீழ்த்தியது கோல் மார்வல்ஸ்

கண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் - ஜப்னா கிங்ஸை வீழ்த்தியது கோல் மார்வல்ஸ்

எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோல் மார்வல்ஸ் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Avishka Fernando 59 ஓட்டங்களையும் Pathum Nissanka 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் கோல் மார்வல்ஸ் அணி சார்பில் Zahoor Khan 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றிப்பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Alex Hales 65 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Niroshan Dickwella 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் Asitha Fernando மற்றும் Fabian Allen ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.