இலங்கைத் தூதுவர் அஜித் தோவாலுடன் சந்திப்பு!

இலங்கைத் தூதுவர் அஜித் தோவாலுடன் சந்திப்பு!

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட,இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து அண்டை நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார். 

இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார் தோவாலை நேற்று (12) புதுடில்லியில் சந்தித்து தற்போதைய நிலையை ஆய்வு செய்தார் என கூறப்பட்டுள்ளது. 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இருவரும் ஆய்வுசெய்துள்ளனர். 

இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் இந்தியாவின் முயற்சிகளை பாராட்டிய உயர் ஸ்தானிகர், இந்தியாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக அஜித் தோவாலிடம் கூறியுள்ளார்.

“யாரும் முன்வராதபோது இந்தியா எங்களுக்கு உதவிகளை வழங்கியது. இந்தியா எங்களுக்கு நிதியுதவியை மாத்திரம் வழங்கவில்லை IMF மற்றும் பிற வளர்ச்சி பங்காளிகளுடன் பேசியது, எங்களுக்கு ஆதரவளிக்க அவர்களை ஊக்குவித்துள்ளது,என்றும் உயர் ஸ்தானிகர் நன்றிதெரிவித்துள்ளார்.