இ.தொ.காவின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

இ.தொ.காவின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

முன்னாள் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தனது 79 ஆவது வயதில் இன்று (23) காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய முத்து சிவலிங்கம் அக்கட்சியின் மூத்த உறுப்பினராவார்.

1994 முதல் 2010 வரை இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

முத்து சிவலிங்கம் 2015 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 45,352 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.