இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி முன்னெச்சரிக்கை!

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி முன்னெச்சரிக்கை!

இந்து சமுத்திரத்தின் சுமாத்ரா தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, கரையோரத்திலும், அதனை அண்டிய பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.