இந்த வாரம் எப்படி - 2-5-2022 முதல் 8-5-2022 வரை!

இந்த வாரம் எப்படி - 2-5-2022 முதல் 8-5-2022 வரை!

லாப அரமான வாரம். லாப அதிபதி சனியும், ராசி அதிபதி செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும், தொழில் துவங்கும் அமைப்பும் உண்டாகும். வராக் கடன்கள் வசூலாகும். தொழில் போட்டி, பொறாமை, மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும்.

எடுத்த முயற்சியில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறும் ஆற்றல் உண்டாகும். உங்களின் பெயர், புகழ், உயரும். உத்தியோ கஸ்தர்களுக்கு கவுரவமான பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், வருகையும் மகிழ்ச்சி தரும். சித்தப்பாவின் ஆதரவு கிடைக்கும். வாலிப வயதினருக்கு மணமாகும். புத்திர பிராப்தம் கிட்டும். பெண்களுக்கு அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கும் யோகம் கிட்டும். ஸ்ரீ வராகி அம்மனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406