பிரியமாலியுடன்  தொடர்பு? ஞானசார தேரரிடம் விசாரணை

பிரியமாலியுடன்  தொடர்பு? ஞானசார தேரரிடம் விசாரணை

நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரிடம் இன்று இரகசிய பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் ஞானசார தேரரிடம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தொடர்பில் தினிலி பிரியமாலியின் கையடக்கத் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடல்கள் தொடர்பில் அவர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளார்.