ரசிகர்களுடன் விஜய் க்ளிக்கிய செல்ஃபி @ GOAT ஷூட்டிங் ஸ்பாட்!

தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். ‘GOAT’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இது நடந்துள்ளது.

ரசிகர்களுடன் விஜய் க்ளிக்கிய செல்ஃபி @ GOAT ஷூட்டிங் ஸ்பாட்!

தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். ‘GOAT’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இது நடந்துள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது GOAT என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அண்மையில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த சூழலில் சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

தன்னை காண ரசிகர்கள் வந்ததை அறிந்த விஜய், படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது ஏறி ரசிகர்களை சந்தித்து உற்சாகம் கொடுத்தார். தொடர்ந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். அதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதை விஜய் தனது வழக்கமாக கொண்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து இந்த பாணியை அவர் கடைபிடித்து வருகிறார்.