ஜனாதிபதித் தேர்தலில் இ.தொ.கா ரணிலுக்கு ஆதரவு - ஜீவன் தொண்டமான்  அறிவிப்பு

2025ஆம் ஆண்டு தொடக்கம் தோட்டங்களில் கல்வி கற்கும் இளைஞர்களுக்கு அரசியல் விஞ்ஞானத்தை பாடமாக கற்கும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், இளம் பெண்களுக்கும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

ஜனாதிபதித் தேர்தலில் இ.தொ.கா ரணிலுக்கு ஆதரவு - ஜீவன் தொண்டமான்  அறிவிப்பு

பெருந்தோட்டத்தில் தற்போது நிலவும் மூன்று முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த யோசனைகளுக்கு தீர்வு வழங்க அவர் இணக்கம் தெரிவித்ததால், ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி அவருக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு தொடக்கம் தோட்டங்களில் கல்வி கற்கும் இளைஞர்களுக்கு அரசியல் விஞ்ஞானத்தை பாடமாக கற்கும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், இளம் பெண்களுக்கும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஹோட்டல் பாடநெறிகள், கணினி கற்கைநெறிகள், ஆடைகள் உள்ளிட்ட 15 பாடநெறிகளில் தொழிற்பயிற்சி பெற்ற 245 மாணவர்களுக்கு அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம்  சான்றிதழ்களை வழங்கி வைத்ததாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.