சிறைப்பறவை மீண்டும் $120,000 கையாடல் 

அமெண்டா யாவ், 37, எனப்படும் அந்தப் பெண் தமது பெயரை சட்டபூர்வமாக மாற்றுவதற்கு முன் இயோ ஷி குயி என்ற பெயரைக் கொண்டிருந்தார்.

சிறைப்பறவை மீண்டும் $120,000 கையாடல் 

சிறைக்குள் போவதும் வருவதுமாக இருந்த பெண் ஒருவர், தமது முதலாளியின் $120,000 பணத்தைக் கையாடல் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறை சென்றுள்ளார்.

அமெண்டா யாவ், 37, எனப்படும் அந்தப் பெண் தமது பெயரை சட்டபூர்வமாக மாற்றுவதற்கு முன் இயோ ஷி குயி என்ற பெயரைக் கொண்டிருந்தார்.

தம் மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டை வெள்ளிக்கிழமை (மார்ச் 8) ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஈராண்டு, ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மனிதவளச் சேவைகள் வழங்கும் நிறுவனத்தில் கையாடல் செய்த தொகையில் $20,000 பணத்தைத் திரும்பத் தந்துவிட்டார்.

இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு பல்வேறு மோசடிக் குற்றங்களுக்காக அந்தப் பெண்ணுக்கு 10 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரையன் டான் கூறினார்.

மீண்டும் 2020ஆம் ஆண்டு திருட்டுக் குற்றத்துக்காக அவர் சிறை சென்றார்.

இருப்பினும், அவர் ஈடுபட்ட அந்தக் குற்றங்கள் தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்படவில்லை.

ஆக அண்மைய குற்றம் புரிந்த நிறுவனத்தில் சம்பளக் கணக்கு ஊழியராக யாவ் வேலை பார்த்தார்.

பணத்தை அனுப்பும் ஏற்பாடுகளைச் செய்யவும் சம்பளம் தொடர்பான வங்கிக் கணக்கைக் கையாளவும் அந்நிறுவனத்தில் அவருக்கு முழு உரிமை இருந்தது.

2022 ஆகஸ்ட் முதல் 2023 மார்ச் வரை வங்கி மூலம் 21 முறை அவர் பணம் அனுப்பினார்.

அந்தப் பணத்தின் மொத்தத் தொகை ஏறக்குறைய $120,000.

நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து தமக்கும் தமது நண்பருக்கும் சொந்தமான மூன்று வங்கிக் கணக்குகளுக்கு அந்தப் பணத்தை யாவ் அனுப்பினார்.

வங்கியில் முன்னர் வேலை செய்த ஊழியர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் சம்பளத்தை வரவு வைப்பதாக யாவ் குறிப்பிட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.