தரவரிசையில் இலங்கை கால்பந்து அணி முன்னேற்றம்
ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் கம்போடிய அணியை 4–2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த இலங்கை கால்பந்து அணி உலக கால்பந்து தரவரிசையில் 200 அணிகளுக்குள் முன்னேற்றம் கண்டுள்ளது.
கம்போடியாவுக்கு எதிரான இரண்டு சுற்றுப் போட்டிகளில் முதல் போட்டியை சமன் செய்த இலங்கை அணி 205 ஆவது இடத்தில் இருந்து 203 ஆவது இடத்திற்கு முன்னேறிய நிலையில் இரண்டாவது போட்டியில் வென்றதை அடுத்து 199 ஆவது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு தரவரிசையில் 122 ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி 2022 ஆம் ஆண்டாகும்போது 207 ஆவது இடம் வரை பின்தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.