விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தானாக திறப்பு!

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தானாக திறப்பு!

பலத்த மழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று இரவு தானாக திறக்கப்பட்டுள்ளதாக குறித்த நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 722 மில்லியன் கனமீட்டரை எட்டியதையடுத்து, வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 159 கனமீட்டர் நீர் நீர்த்தேக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு வான் கதவுகள் தானாக திறக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால்  நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக 

இருக்குமாறு நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.