இந்தியாவில் விற்பனைக்கு வந்தது லாவா பிளேஸ் Curve 5ஜி ஸ்மார்ட்போன் 

மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் Curve 5ஜி போன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது லாவா பிளேஸ் Curve 5ஜி ஸ்மார்ட்போன் 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது லாவா பிளேஸ் Curve 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் Curve 5ஜி போன் விற்பனைக்கு வந்துள்ளது.


லாவா பிளேஸ் Curve 5ஜி சிறப்பு அம்சங்கள்

6.7 இன்ச் 3டி Curved AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டிமான்சிட்டி 7050 சிப்செட்
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
8ஜிபி ரேம்
128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள கேமரா
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
5,000mAh பேட்டரி
33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
யுஎஸ்பி டைப்-சி
5ஜி நெட்வொர்க்
இந்த போனின் விலை ரூ.17,999 முதல் தொடங்குகிறது