முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

முட்டைகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

முட்டைகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மார்ச் 18 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தால் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


அவற்றில் 95 வீதமானவை லங்கா ச.தொச விற்பனை வலையமைப்பின் மூலம் 37 ரூபாய்க்கு நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில், முட்டை இறக்குமதிக்காக வழங்கப்பட்டுள்ள காலப்பகுதி கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ரமழான் மற்றும் நத்தார் கொண்டாட்டக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கிணங்க, கேக் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்குத் தேவையான முட்டைகளை விநியோகிப்பதற்குத் தேவையான முட்டைத் தொகையை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.