1,700 ரூபா - நாங்கள் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டோம்!

ஜனாதிபதி 1,700 தருவதாக தெரிவிக்கவில்லை என தெரிவிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 1,700 ரூபா - நாங்கள் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டோம்!

ஜனாதிபதி 1,700 தருவதாக தெரிவிக்கவில்லை என தெரிவிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் இரண்டு, மூன்று மாதங்களாக இழுப்பட்டு வருகிறது. சம்பள நிர்ணய சபை சம்பளம் தருவதாக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மே 1 ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்து இருந்தார். வர்த்தமானி வௌியிட்டப்பின் தற்பொழுது வர்த்தமானி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி 1,700 தருவதாக தெரிவிக்கவில்லை என தெரிவிக்கிறார். இங்கு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் தான் ஆகவே இந்த தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை புரியாத புதிராகவே காணப்படுகிறது.

சம்பள பிரச்சனை தீர்க்கப்படுமாயின் அதற்கு நாங்கள் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டோம். இவ்வாறு தெரிவித்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறும் நடவடிக்கையில் ஈடுபட கூடாது.

வட கிழக்கில் தமிழ் பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது அது அவர்களுடைய விருப்பம், எங்களை பொறுத்த வரையில் பெரும்பான்மையான வாக்குகளை பெறும் நபரிடம் இருந்து வாக்குகளை சிதறடிப்பது ஒரு பாதகமாக அமையும் என தெரிவித்தார்.