தோட்ட வீட்டை ஆக்ரமித்த அரவிந்தகுமார் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தோட்ட வீட்டை ஆக்ரமித்த அரவிந்தகுமார் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரர் 1987ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த லிந்துலை ஹென்ஃபோல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்றை தோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு தோட்டத்தில் கம்பனியின் ஒரு முகாமையாளராக பணிபுரிந்தபோது அரவிந்தகுமார் தனது உத்தியோகபூர்வ இல்லமாக பிஎல்சிக்கு கம்பனிக்கு சொந்தமான வீட்டில் வசித்துள்ளார். 

எவ்வாறாயினும், தோட்டப் பணியிலிருந்து அவர் வெளியேறிய பின்னரும் குறித்த வீட்டை கம்பனியிடம் ஒப்படைக்காது சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அரவிந்தகுமார் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக வீட்டில் வசித்துவந்த நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அவர் வீட்டை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.