மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பொங்கட்டும்; திகாம்பரம் பொங்கல் வாழ்த்து

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வரி விதிப்புகள், பொருட்களின் விலைவாசி பலமடங்கு அதிகரிப்பு போன்றவற்றின்   காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பொங்கட்டும்; திகாம்பரம் பொங்கல் வாழ்த்து

நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் பொங்க இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவாரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

   அவர் மேலும் தமது செய்தியில்,

   நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வரி விதிப்புகள், பொருட்களின் விலைவாசி பலமடங்கு அதிகரிப்பு போன்றவற்றின்   காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் மலையக மக்கள் போதுமான வருமானமும் சம்பள உயர்வும் இல்லாமல் சொல்லொணா துயரத்தை எதிர்நோக்கியுள்ளார்கள். பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளைப் பிரித்துக் கொடுத்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் அவர்கள் நிரந்தர வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும், யைடமும் கையேந்தாமல் கௌரவமாக வாழவும் வழி பிறக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

   மலர்ந்துள்ள புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார நெருக்கடி நீங்கி, அரசியல் ரீதியில் பழையன கழிந்து புதியன புகுந்து சுபிட்சம் ஏற்படவும் மகிழ்ச்சியும் இன்பமும் பொங்குவதாக அமைய வேண்டும் என தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எமது உரிமைகளுக்கும் தேவைகளுக்கும் குரல் கொடுக்க ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருந்து எதிர்காலத்தை வளமுள்ளதாக ஆக்கிக் கொள்ள தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் திடசங்கற்பம் பூணுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.