இலங்கையில் எதிர்பாராத விபத்து - ஏழு பிக்குகள் மரணம்!
இலங்கையில் நேற்று இரவு எவரும் எதிர்பாராத கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் வாகன விபத்துகளால் மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து விழிப்புணர்கள் வழங்கப்பட்டு வரும் சூழல் இலங்கையில் முதல் முறையாக கேபிள் கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
மெல்சிரிபுர பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்துக்கு உள்ளானதில் ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 9 மணியளவில் புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்தபோது கேபிள் காரில் 13 பிக்குகள் பயணித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மூவர் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பிக்குகளாகும்.
காயமடைந்த ஏனைய ஆறு பிக்குகளும் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலை உச்சிக்கு பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் காரின் கம்பி அறுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருகலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Editor