"ஹாய் மை லவ்ஸ்" - ராஷ்மிகாவின் வைரல் பதிவு
தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு காதல் ஜோடி, தற்போது தங்களின் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை தனது கணவர் என்று அறிமுகப்படுத்தி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
"ஹாய் மை லவ்ஸ்" என்று தொடங்கும் அந்த பதிவில், "எனது கணவர் விஜய் தேவரகொண்டாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்" என ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான காதல் என்றால் என்ன என்பதையும், அமைதியான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையும் எனக்குக் கற்றுக்கொடுத்தவர் இவர்தான் என்று ராஷ்மிகா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பெரிய கனவுகளைக் காண்பதில் தவறில்லை என்றும், என்னால் எதையும் சாதிக்க முடியும் என்றும் அவர் தினமும் எனக்கு ஊக்கமளித்தார் எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
"நண்பர்களுடன் பயணம் செய்வதுதான் உலகிலேயே சிறந்த விஷயம் என்பதை அவர் எனக்குக் காட்டினார். இந்த மனிதரைப் பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும்" என்று ராஷ்மிகா நெகிழ்ந்துள்ளார்.
தனது வாழ்க்கையில் கிடைத்த அனைத்து வெற்றிகளுக்கும், போராட்டங்களுக்கும் இப்போது ஒரு அர்த்தம் கிடைத்திருப்பதாகக் கூறும் ராஷ்மிகா, "விஜ்ஜு (Vijju), உன் மனைவியாவதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இனி கொண்டாட்டம்தான்" என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Editor