தடையின்றி நிவாரணப்பணிகள் இடம்பெற வேண்டு - சஜித் வலியுறுத்தல்

தடையின்றி நிவாரணப்பணிகள் இடம்பெற வேண்டு - சஜித் வலியுறுத்தல்

டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள், உள்நாட்டுத் தர்க்கங்களினால் தடைப்படக் கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் உதவிக்காகக் காத்திருக்கும் நிலையில், ஒருங்கிணைப்புப் பணிகளில் குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என சஜித் பிரேமதாச தனது 'X' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"அரசாங்கம் களத்திலுள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, ஒருங்கிணைப்பையும் தடையற்ற ஆதரவையும் உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் உதவிக்காகக் காத்திருக்கும் நிலையில், இவ்வாறான குழப்பங்களை எவ்வாறு அனுமதிக்க முடியும்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் நிவாரணப் பணிகள் எக்காரணம் கொண்டும் தாமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் கிராமசேவகர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், இன்று ( 27) முதல் பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள பின்னணியிலேயே சஜித் பிரேமதாச இந்தத் தர்க்கத்தை முன்வைத்துள்ளார்.