இந்திய நாடாளுமன்ற புகை குண்டு தாக்குதல்; மூளையாக செயல்பட்டவர் கைது

லலித் ஜா என்ற இந்த நபர் சம்பவம் நடந்த மறுநாள் நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய நாடாளுமன்ற புகை குண்டு தாக்குதல்; மூளையாக செயல்பட்டவர் கைது

இந்திய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட புகை குண்டுத் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லலித் ஜா என்ற இந்த நபர் சம்பவம் நடந்த மறுநாள் நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 22ஆம் ஆண்டு நிறைவடைந்த அதே நாளில், இது போன்ற ஒரு சம்பவம் ஒன்று இடம்பெற்றது இந்தியாவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கீழ்சபையின் அறைக்குள் புகுந்து ஓடியவர், சபாநாயகர் இருக்கை மற்றும் கேலரியில் இருந்து புகைக்குண்டுகளை கொளுத்திய நபர், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து புகைக்குண்டுகளை வெளியில் கொளுத்திய பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.