தேர்தலை நடத்த பொலிஸ்மா அதிபர் அவசியமா? மகிந்த தேசப்பிரிய கூறுவதென்ன?
பொலிஸ்மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடையூறு ஏற்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடையூறு ஏற்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான பணிகள் இருப்பின், தேர்தல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பரிசோதகர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு அதனை மேற்கொள்ள முடியும்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் எந்த தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பணிகள் முறையாக நடந்து வருகிறது. பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக அந்த செயற்பாடுகளை ஒருங்கிணைக்க முடியும்.
இதனால் தடையின்றி ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Editor