தீப ஒளியில் இருள் விலகுவது போல் உங்கள் வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்திருக்கட்டும் - ஜீவன் தொண்டமான்
தீப ஒளியில் இருள் விலகுவது போல், உங்கள் வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்திருக்கட்டும். அத்துடன், எமது மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றுபடுவோம் என்று இந்த உன்னதமான நாளில் அழைப்பு விடுக்கின்றேன்" என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் வெற்றி, ஆரோக்கியம், மகிழ்ச்சி நிரம்பியதாக மலரட்டும். இந்த தீபாவளி பண்டிகை உங்கள் வாழ்வில் புதுமையான ஒளிகளால் நிரம்பி மகிழ்ச்சி கொண்டாடுவதை உறுதியாக்கட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது..
எமது நாட்டை சூழ்ந்துள்ள இருள் அகன்று, நாட்டுக்கும் மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருனம் இதுவாகும்.
ஒற்றுமை, ஐக்கியம் என்பவற்றின் முக்கியத்துவத்தையும் தீபாவளிப் பண்டிகை உணர்த்துகின்றது. ஆகவே, எமது மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றுபடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், எதைச் செய்தாலும், பாதுகாப்பு மிக முக்கியமானதென்பதுடன், மிகவும் பாதுகாப்பான முறையில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவோம். இல்லாதவர்களுக்கு தம்மிடம் உள்ளதை கொடுத்து, அவர்களை மகிழ்விப்போம்.
நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும். வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்.
மகிழ்ச்சியான இந்த நாளில் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தீபாவளி நல்வாழ்த்தை தெரிவித்துக்கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Editor