முஸ்லிம்கள் அற்ற மோடியின் அரசாங்கம்

எனினும் முஸ்லிம் ஒருவருக்கு கூட இடம் தரப்படாமையானது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது

முஸ்லிம்கள் அற்ற மோடியின் அரசாங்கம்

இந்திய அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காத அமைச்சரவை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

இரண்டு நாட்களுக்கு முன்னர் பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 31 அமைச்சர்களும் 41 இணை அமைச்சர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

எனினும் முஸ்லிம் ஒருவருக்கு கூட இடம் தரப்படாமையானது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 200 மில்லியன் அதாவது 2 கோடி முஸ்லிம்கள் வசிக்கும் நிலையில் இந்த செயற்பாடு கண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999இல் பாரதிய ஜனதாவின் வாஜ்பாய் பிரதமரான போது, அவரின் அமைச்சரவையில் 2 முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். 

2004இல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமரானார். அதன்போது 4 முஸ்லிம்கள் மத்திய அமைச்சர்களாகினர்.

2009இல் மீண்டும் மன்மோகன் சிங் பிரதமரான போது 5 முஸ்லிம்கள் மத்திய அமைச்சர்களாக செயல்பட்டனர்.

இதையடுத்து 2014இல் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா ஆட்சியில் நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக செயல்பட்டார்.

2019இல் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதேநேரம் பாரதிய ஜனதாவின் சார்பில் இந்த முறை முஸ்லிம்கள் எவரும் தேர்தலிலும் போட்டியிடாததோடு இந்த முறை தேர்தலில் மொத்தம் 24 பேர் முஸ்லிம்களை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்துள்ளனர்

இதில் 21பேர் இந்தியா கூட்டணியின் மூலம் தெரிவானவர்களாவர்.