கேக் துண்டு விவகாரம் : நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் கத்திக்குத்து முயற்சி!

பாராளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.

கேக் துண்டு விவகாரம் : நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் கத்திக்குத்து முயற்சி!

பாராளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.

அதன்போது ஒரு ஊழியர் மற்றைய ஊழியரைக் கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

கேக் துண்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே மோதலாக மாறியதாக தெரிய வருகிறது.

வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

பொலிஸ் உட்பட பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவினர் தலையிட்டு இவர்களைச் சமரசம் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.