மஹிந்தவின் கோட்டையில் ரணிலுக்கு அடித்த அதிஷ்டம் 

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தேசிய பொதுவேட்பாளராக களமிறங்க வேண்டும் என மாவட்ட மட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மஹிந்தவின் கோட்டையில் ரணிலுக்கு அடித்த அதிஷ்டம் 

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தேசிய பொதுவேட்பாளராக களமிறங்க வேண்டும் என மாவட்ட மட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் அரசியல் கோட்டை அம்பாந்தோட்டை மாவட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக களமிறங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு என்பனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.