மலையக அரசியல் களத்தில் குதிக்கும் சுபாஷ்கரன் ; புதிய கூட்டணியை அமைக்கிறார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளரை களமிறக்க சர்வதேச வர்த்தகரான சுபாஷ்கரன் அல்லிராஜா செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சர்வதேச வர்த்தகரும், லைக்கா மொபைலின் உரிமையாளருமான சுபாஷ்கரன் அலிராஜா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசியல் கட்சி ஒன்றின் உரிமையையும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சி "அருணலு மக்கள் கூட்டணி" (Arunalu People's Alliance) என்ற பெருந்தோட்ட அரசியல் கட்சியாகும். அதன் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.கிருஷான் என்றும் கூறப்படுகிறது.

புலம்பெயர் தமிழ் மக்களுடன் நெருக்கமாக அரசியல் செய்துவரும் சுபாஷ்கரன் அல்லிராஜா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கும் நோக்கில் இந்தக் கட்சியைக் கையகப்படுத்தியுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக, அடுத்த மாதம் முதல் பரந்துபட்ட ஊடக நடவடிக்கையை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.