மாபெரும் வெற்றியடைந்த பட தவறவிட்ட நடிகர் சூர்யா 

திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவர் சூர்யா. கங்குவா படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

மாபெரும் வெற்றியடைந்த பட தவறவிட்ட நடிகர் சூர்யா 

திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவர் சூர்யா. கங்குவா படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் என்கின்றனர். அது ரோலெக்ஸ் கதாபாத்திரத்தின் படமா அல்லது இரும்பு கை மாயாவி திரைப்படமா என தெரியவில்லை.

இப்படி பிசியாக தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் சூர்யா, தனது கெரியரில் மிஸ் செய்த ஒரு படம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஹிந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அந்தாதுன். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என இயக்குனர் ஸ்ரீராம் முடிவு செய்து, சூர்யாவிடம் கதையும் கூறியுள்ளார். ஆனால், இந்த கூட்டணி அமையவில்லை.

அதனால் ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவை வைத்து அந்தாதுன் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதை சமீபத்தில் அளித்த பெட்டியில் இயக்குனர் ஸ்ரீராம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.