திமுகவுடன் இணைந்த நடிகர் கமல்ஹாசன்

எம்ஜிஆர் தொடங்கி பலரும் அரசியலில் ஈடுபட்டு தான் வருகிறார்கள். நடிகர் ரஜினி அரசியல் வருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த நிலையில் அது கடைசியில் ஏமாற்றமாகவே முடிந்தது.

திமுகவுடன் இணைந்த நடிகர் கமல்ஹாசன்

சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சிக்கு வருவது ஒன்றும் புதியது இல்லை.

எம்ஜிஆர் தொடங்கி பலரும் அரசியலில் ஈடுபட்டு தான் வருகிறார்கள். நடிகர் ரஜினி அரசியல் வருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த நிலையில் அது கடைசியில் ஏமாற்றமாகவே முடிந்தது.

ஆனால் இன்னொரு பக்கம் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி பயணித்து வருகிறார். விரைவில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் மாஸ் காட்ட இருக்கிறார்.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேலைகளில் எல்லா அரசியல்வாதிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மக்கள் நீதி மய்யம், திமுக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதோடு மக்கள் நீதி மய்யத்திற்கு 2025ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.