கம்பனிகளுக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி போராட்டம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி போராட்டத்தில் இறங்கவுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டன் நகரில் குறித்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

“மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி  அன்று முதல் இன்றுவரை காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்துள்ளது. நல்லாட்சியின்போது பல புரட்சிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அடுத்துவரும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்போது தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். இது உறுதி.

அதேபோல தற்போதைய சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெற நாம் முழு ஆதரவையும் வழங்குவோம். கம்பனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் அழுத்தம் பிரயோகித்து 28 ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படும்.” – எனவும் திகாம்பர் குறிப்பிட்டுள்ளார்.