நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக உயர்வு

மக்களுக்கான உண்மையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாததால் ஒவ்வொரு முறையும் நாடு என்ற ரீதியில் நாம் தோல்வியடைந்துள்ளோம்

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக உயர்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்ற போது வெளிநாட்டு கையிருப்பு கடுமையான சரிவை சந்தித்திருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடிந்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை மக்களுக்கான உண்மையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாததால் ஒவ்வொரு முறையும் நாடு என்ற ரீதியில் நாம் தோல்வியடைந்துள்ளோம் வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனரஞ்சகமான தீர்மானங்களை விரும்புவதால், அரசியல்வாதிகளும் அவ்வாறான தீர்மானங்களையே செயல்படுத்தினர். ஆனால், மக்களுக்கான உண்மையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாததால் ஒவ்வொரு முறையும் நாடு என்ற ரீதியில் நாம் தோல்வியடைந்துள்ளோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயக்கார,

மக்கள் ஜனரஞ்சகமான முடிவுகளை விரும்புவதால் அரசியல்வாதிகளிடமிருந்து பிரபலமான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பிரபலமான முடிவுகள் எடுக்கப்படும் போதெல்லாம், எங்களைப் போன்ற குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் ஒவ்வொரு முறையும் ஒரு நாடாக நாம் தோல்விகண்டோம்.

இதில் இருந்து எதிர்க்கட்சிகளும் தப்ப முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கான முடிவுகளை எடுத்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்றே இவற்றை கூற வேண்டும். இறுதியில், நம் நாடு ஒரு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டு பொறுப்பை ஏற்க அனைவரும் பின்வாங்கினர்.

ஜனாதிபதி உட்பட நாம் இந்த பொறுப்பை ஏற்கவில்லை என்றால் பேரூந்துகளில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பேரணி நடத்துபவர்கள் அந்த மக்களை இழக்க நேரிட்டிருக்கும்.

நாடு பெரும் சோகத்தை நோக்கிச் சென்றது. இப்போது எங்கள் மீது குற்றம் சாட்டும் சிலர் ஆட்சியில் இருந்தார்கள், நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தோம் என்பதும் நினைவில் இல்லை.

நாட்டின் அந்நிய கையிருப்பில் ஒரு டொலர் கூட இல்லாத சூழ்நிலையில் ஆட்சியை பொறுப்பேற்றோம். எமது புலம்பெயர் தொழிலாளர்கள் மத்திய வங்கியின் டொலர் சொத்துக்களை விட அதிகமான சொத்துக்களை வைத்திருந்தனர்.

நாட்டின் டொலர் கையிருப்பை 3.6 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த தருணத்தில் நாங்கள் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், நாட்டில் டொலர்கள் இல்லாமல், எங்களால் எதையும் இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த தருணத்தில் நினைத்த போக்கில் பணம் அச்சிடும் நிலையே காணப்பட்டது. அதனால்தான் பணவீக்கம் உயர்ந்தது. அதே போக்கில் பணம் அச்சிடப்பட்டிருந்தால் இன்று சந்தையில் பொருட்களை வாங்குவதற்கு பணத்தை ஒரு மூட்டையில்தான் கொண்டுபோக வேண்டியிருக்கும்.

கடந்த ஆண்டு இறுதியில் ஒரு டொலர் மதிப்பு 365 ரூபாயாக இருந்தது. டொலர் 600 முதல் 700 வரை உயர்ந்திருக்கும். ஆனால் இன்று டொலரை 320 ரூபாவுக்கு கொண்டு வர முடிந்துள்ளது.

டொலரின் மதிப்பை 11 சதவீதம் குறைக்க முடிந்தது. வட்டி விகிதம் 25 சதவீதத்திற்கு மேல் இருந்தது. ஆனால் வட்டி விகிதத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சமநிலைக்கு கொண்டுவர முடிந்தது. தற்போது மீண்டும் மக்கள் வங்கியில் கடன் பெறும் நிலைக்கு நாட்டை கொண்டுவந்துள்ளோம்.

கடந்த காலங்களில் மக்கள் அமைப்பு மாற்றத்தை கோரினர். இப்போது அது நடக்கிறது. வரி சரியாக வசூலிக்கப்படுகிறது. எல்லோரும் வரி செலுத்துகிறார்கள். நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அந்த நாடுகளுக்குச் சென்று பெரும் வரியை செலுத்துகின்றனர். இங்கு வரி முறையை அமுல்படுத்தினால் விமர்சிக்கின்றனர்.