ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்: மொட்டுக் கட்சிக்குள் எதிர்ப்பு

அவர்களது பென்ஷனையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நாடாளுமன்ற ஆயுட் காலம் முடிவடைந்த பின்பே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்: மொட்டுக் கட்சிக்குள் எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ கூறுகின்ற போதிலும் அந்தக் கட்சிக்குள் அதிகமானவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் உடன்பாடில்லை என்று அறியமுடிகின்றது.

அதற்குக் காரணம் அடுத்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த பலர் தோல்வியடையப் போவது நிச்சயம். அப்படி தோல்வியடைந்தால் பலரது 'பென்ஷன்' கூட இல்லாமல்போகும். அவர்களது பென்ஷனையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நாடாளுமன்ற ஆயுட் காலம் முடிவடைந்த பின்பே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதனால், அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துமாறு ஜனாதிபதிக்குத் தூது அனுப்பி வருகின்றார்கள் என்றும் தெரியவருகின்றது.