'அவசியம் இல்லை' - டில்வின் சில்வா அதிரடிக் கருத்து
எமது நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள சர்வதேசத்தை இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என கருதுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (7) ஊடகவியலாளர்கள், “சர்வதேச நீதி கோரி தமிழ் கட்சிகள் முன்னெடுக்கும் கையெழுத்து போராட்டம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?” என வினவினர். இதற்கு பதிலளித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே இருந்த அரசாங்கங்களில் இதுகுறித்த விசாரணைகள் நடைபெறவில்லை என்பது உண்மைதான். காரணம், குற்றங்களுடன் அவர்களும் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். குற்றங்கள் செய்தவர்கள் நியாயத்தை வழங்க மாட்டார்கள்.
இப்போது இருப்பது மக்களாட்சி. மக்களுக்கு நியாயத்தை வழங்குவது எமது பொறுப்பாகும். இதற்கு சர்வதேச சக்திகள் அவசியமில்லை. இது எமது நாட்டின் பிரச்சினை. இலங்கை சட்டத்தின் பிரகாரம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுபற்றி யாரும் சந்தேகப்பட வேண்டாம்” என்றார்.
Editor