சிஎல்எப்பில் துரைமார்களுடன் பேச்சுவார்த்தையே நடத்தினோம் - உணவு அருந்தவிட்டு செல்வது வழமை - ராமேஷ்வரன்

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் எமது அமைச்சர் நேற்று இந்த சபையில் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். அதன்பின்னர் இச்சபையில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

சிஎல்எப்பில் துரைமார்களுடன் பேச்சுவார்த்தையே நடத்தினோம் - உணவு அருந்தவிட்டு செல்வது வழமை - ராமேஷ்வரன்

தோட்ட முகாமையாளர்களுக்கு கொட்டகலை சிஎல்எப்பில் விருந்து வைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர்கூட (வேலுகுமார் எம்.பி.) நுவரெலியா வந்திருந்தபோது அமைச்சர் ஜீவன் தொண்டமான் விருந்து வைத்துள்ளார் என்று இதொகாவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் எமது அமைச்சர் நேற்று இந்த சபையில் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். அதன்பின்னர் இச்சபையில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அரசாங்கமும், அமைச்சர்களும், நாடகமாடுகின்றனர் எனக் கூறியிருந்தார். யார் நாடகமாடுகின்றனர், நடிக்கின்றனர் என்பதை வேலுகுமாரிடம்தான் கேட்க வேண்டும்.

இதொகா என்பது பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கமாகும். 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி, தொழில் அமைச்சர் மற்றும் எமது அமைச்சர் ஆகியோர் உறுதியாக உள்ளனர். இது மக்களுக்கும் தெரியும்.

கம்பனிகாரர்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு எதிரணியில் உள்ளவர்கள்தான் தூண்டினர். ஆகவே நாடகமாடுவது யார்?

1,700 ரூபா கிடைப்பது சிலருக்கு பொறாமையாக உள்ளது. அதனால்தான் அது கிடைக்காது எனக் கூறிவருகின்றனர். நாடகமாடுபவர்கள் எமது பக்கம் இல்லை. அந்த பக்கம்தான் இருக்ககூடும்.

அதேவேளை 4 ஆம் திகதி நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் 5 ஆம் திகதி துரைமாரை அழைந்து விருந்து வைக்கப்பட்டது என குற்றஞ்சாட்டப்பட்டது.

கொட்டகலை சிஎல்எப் என்பது தினந்தோறும் மக்கள் வந்து செல்லும் இடம். அவ்வாறு பிரச்சினைகளைக்கூற வரும் மக்கள் சந்திப்பின் பிறகு உணவு அருந்தவிட்டு செல்வது வழமை. அது இன்று நேற்று அல்ல சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் தொட்டு நடைபெற்றுவருகின்றது.

5 ஆம் திகதி பல பெருந்தோட்ட துரைமார் வருகை தந்திருந்தனர். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினரும் நுவரெலியா வந்தபோது அமைச்சர் ஜீவனுடன் விருந்தில் பங்கேற்றுதான் சென்றுள்ளார்.

இதொகாவை விமர்சிப்பதைவிடுத்து மக்களுக்கு சேவையாற்றுங்கள்.” – என்றார்.