மோடியின் வெற்றிக்கு ஜீவன் வாழ்த்து
நரேந்திர மோடி ஜனநாயக முறையில் இந்த வெற்றியை பெற்றுள்ளார்
இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நரேந்திர மோடிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவிப்பதுடன் மோடியின் வெற்றிக்காக வாக்களித்த இந்திய மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்துள்ளார்.
நரேந்திர மோடி ஜனநாயக முறையில் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
இந்தியாவை மூன்றாவது முறையாகவும் சிறந்த ஒரு தலைவராக வழிநடத்தி செல்வார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், இந்திய பிரதமராக இருந்த மோடி எமது நாட்டிற்கு வழங்கிய ஒத்துழைப்பினை தொடர்ந்தும் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
Editor