காலநிலை சீர்கேடு ; வரலாறு காணாத வகையில் மரக்கறிகள் விலையுயர்வு
இலங்கை முழுவதும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற தொடர் மழையின் காரணமாக அனைத்து விவசாய உற்பத்திகளும் வரலாறு காணாத அளவிற்கு விலை அதிகரித்துள்ளது.
இலங்கை முழுவதும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற தொடர் மழையின் காரணமாக அனைத்து விவசாய உற்பத்திகளும் வரலாறு காணாத அளவிற்கு விலை அதிகரித்துள்ளது.
இத்துடன் விவசாயிகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.தங்களடைய விவசாய உற்பத்திகள் விலை அதிகரித்திருந்த போதிலும் அதற்கான இலாபத்தை பெற்றுக'கொள்ள முடியாத ஒரு நிலைமையே எற்பட்டுள்ளது.
தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக அதிக அளவிலான விவசாய மருந்துப் பொருட்களை பாவிக்க வேண்டிய ஒரு கட்டாயமான நிலைமை எற்பட்டுள்ளது.இதன் காரணமாக உற்பத்தி செலவினமானது பாரிய அளவில் அதிகரித்துள்ளது.விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற கிருமிநாசினிகள் இரசாயன உரவகைகள் என்பவற்றின் விலை என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது தொடரச்சியான சீரற்ற காலநிலை காரணமாக விவசாய பயிர்கள் முற்றாக பாதிக்கப்பட்டதன் காரணமாக விலைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.விலைச்சல் குறைவடைந்தமை காரணமாக தேவையான அளவை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமை எற்பட்டதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.அநேகமான விவசாய நிலங்கள் முழுமையாக நிரில் மூழ்கியுளளன.
எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் முன்வைக்கின்றார்'கள்.இந்த நிலைமை காரமணாக சிறு வியாபாரிகள் அதாவது அன்றாடம் கொழும்பு மெனிங் சந்தை உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையங்களிலும் நாள்தோறும் கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
ஏனெனில் வழமையாக தாங்கள் கொள்வனவு செய்வதைவிட தற்பொழுது எற்பட்டுள்ள விலை அதிரிப்பின் காரணமாக கொள்வனவு செய்கின்ற அளவு குறைவடைந்துள்ளது.ஏற்கனவே தங்களுடைய வியாபாரத்திற்கு தேவைப்பட்ட பணத்தைவிட அதிகமான பணம் தேவைப்படுகின்றது.எனவே அதனை முதலிடு செய்ய முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் உற்பத்தி குறைவடைந்தமை காரணமாக கொழும்பு உட்பட ஏனைய நகரங்களுக்கு செல்கின்ற மரக்கறிகளின் அளவும் வெகுவாக குறைவடைந்தள்ளது.இதன் காரணமாக லாறி உரிமையாரளர்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.ஏனெனில் கொழும்பு மற்றும் பிற நகரங்களை நோக்கி செல்கின்ற லாறிகள் குறைவடைந்துள்ளது.கொள்வனவு திறன் மற்றும் குறைவான உற்பத்தி போன்ற விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன.
இது தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.
நுவரெலியா பொருளாதார மொத்த விற்பனை நிலையத்தில் விலை (10.01.2024) நிலவரம் கோவா ஒரு கிலோ 430.00 கெரட் ஒரு கிலோ 980.00 லீக்ஸ் ஒரு கிலோ 275.00 ராபு ஒரு கிலோ 140.00 பீட் ஒரு கிலோ 390.00 கிழங்கு ஒரு கிலோ 330.00 புரோகொலி ஒரு கிலோ 4000.00 இவை அனைத்தும் மொத்த விற்பனை வில நிலவரமாகும்.
(நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு)
Editor