மேலும் இருவேறு பகுதிகளில் துப்பாக்கிப் சூடு!

மேலும் இருவேறு பகுதிகளில் துப்பாக்கிப் சூடு!

நீர்கொழும்பு, குட்டுதுவ பகுதியில் இன்று சனிக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உந்துருளியில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நீர்கொழும்பு, குட்டுதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் ஜன்னல் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், களுத்துறை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் சனிக்கிழமை (06) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது விற்பனை நிலையத்தில் பெண் ஒருவர் இருந்துள்ள நிலையில் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.