இந்திய வீட்டுத் திட்டத்தில் ஊழல் - மோசடி ; மனோ பகிரங்க குற்றச்சாட்டு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்து 10ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாங்கள் கொண்டுவந்தோம். அதனை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தில்லு முல்லுகள், பித்தலாட்டங்கள் காரணமாக தேங்கி நிற்கிறது.
இந்திய வீட்டுத் திட்டத்தில் ஊழல் - மோசடி செய்யப்பட்டதால் இத்திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வேலுகுமார் எம்.பியால் கொண்டுவரப்பட்ட மலையக தியாகிகள் தினத்தை பிரகடனப்படுத்தும் தனிநபர் பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
”இதோ வருகிறது.... அதோ வருகிறது.... என்றார்கள். ஆனால், சம்பளம் கிடைக்கவில்லை. அது கிடைக்காது. தற்போது தேர்தல் வரவுள்ளது. கடந்த முறை 1000 ரூபா வழங்கிவிட்டதாக கூறினார்கள். ஆனால், அது முழுமையாக கிடைப்பதில்லை. இது மோடி மஸ்தான் வேலை.
1700 சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக ஜனாதிபதி, தொழில் அமைச்சர் என அனைவரும் அறிவித்தனர். ஆனால், அது கிடைக்கவில்லை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்து 10ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாங்கள் கொண்டுவந்தோம். அதனை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தில்லு முல்லுகள், பித்தலாட்டங்கள் காரணமாக தேங்கி நிற்கிறது.
அதில் இடம்பெற்ற ஊழல் - மோசடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எமது அரசாங்கத்தில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம்.
4000 மில்லியன் ஒதுக்கீட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதாக ஜனாதிபதி கூறினார். ஒன்றும் நடைபெறவில்லை. இது தோல்வியடைந்த அரசாங்கம்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ள நிலையில் தோட்டங்களை கிராமங்களாக அறிக்கிறார்கள். அது வெறும் காகித வேலை.” என்றார்.
Editor