ஜனவரி 10 ஐ மலையக தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் : பிரேரணை முன்வைத்த வேலுகுமார்
பிரேரணையை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வழிமொழிந்தார்.
ஜனவரி 10ஆம் திகதியை மலையக தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட தனிநபர் பிரேரணையொன்றை முன்லைத்தார்.
பிரேரணையை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வழிமொழிந்தார்.
ஜனவரி 10 ஆம் திகதியை மலையகத் தொழிற்சங்க தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு இப்பிரேரணை ஊடாக வேலுகுமார் எம்.பி. அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தார்.
மலையக தொழிற்சங்க தியாகிகள் நினைவுகூரப்பட வேண்டிய அவசியத்துவத்தையும் வேலுகுமார் எம்.பி. இதன்போது சுட்டிக்காட்டினார்.
Editor