மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனருடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இந்த ஆண்டு மொத்தம் மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது. இதில் ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய இரு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றியை ராகவா லாரன்ஸுக்கு கொடுத்துள்ளது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள புதிய படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் தான் தன்னுடைய படத்தை கமிட் செய்துள்ளாராம் ராகவா லாரன்ஸ். இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் அயோத்தி. இப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் மந்திரமூர்த்தி.

இவருடைய இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் நிலையில், கோல்டு மைன் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.